இந்திய ரசிகர்கள் சோகம் கோப்புப் படங்கள்.
கிரிக்கெட்

உலகக் கோப்பை தோல்வி..! இந்திய ரசிகர்கள் சோகம்!

ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று ஓராண்டு நிறைவையொட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

DIN

ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று ஓராண்டு நிறைவையொட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி இதேநாளில் நடைபெற்று முடிந்தது. லீக் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காத இந்திய அணி கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியர்களை அமைதியாக்குவோம் எனக் கூறியதை நிகழ்த்தியும் காட்டினார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி மனமுடைந்த காட்சிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து தங்களது சோகத்தை பகிர்ந்து வருகிறார்கள் இந்திய ரசிகர்கள்.

நல்லவேளையாக இந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்று அசத்தியது. இல்லையெனில் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்திருப்பார்கள்.

நவ.22ஆம் தேதி பார்டர் - கவாஸ்கர் தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் நிச்சயமாக இந்திய அணி வென்று பழிவாங்க வேண்டுமென சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆஸி.யும் பிஜிடி தொடரில் இந்தியாவை பழிவாங்க காத்திருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தத் தொடர் நடைபெறவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

டி20 கோப்பையை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா, “என்ன இருந்தாலும் ஒருநாள் உலகக் கோப்பை பெரியது. அதை வென்றிருக்க வேண்டும்” எனக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT