படம் | AP
கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்; ஆஸி.க்கு எதிரான தோல்வி காரணமா?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாகித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாகித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

டி20 தொடரை முழுமையாக இழந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக ஷாகித் அஸ்லாமை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஷாகித் அஸ்லாம் பாகிஸ்தான் அணியில் பல ஆண்டுகளாக உதவிப் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், உதவி மேலாளர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான இடைக்காலப் பயிற்சியாளராக அண்மையில் ஆக்யூப் ஜாவத் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, ஷாகித் அஸ்லாம் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் முகமது யூசுஃப் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT