கிரிக்கெட்

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய தெ.ஆ. கேப்டன்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்க அணி இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடக்கிறது.

வங்கதேசத் தொடரில் முழங்கை காயத்தால் விலகிய கேப்டன் பவுமா, ஓய்வளிக்கப்பட்ட மார்கோ யான்சன், காயத்தால் விலகியிருந்த கோட்ஜி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் கூறுகையில், “வங்கதேச தொடரை வென்றதை போன்று அடுத்துவரும் தொடர்களிலும் சிறப்பாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வோம். பவுமா அணிக்கு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அவரின் திறமையும் தலைமையும் அணிக்கு மிகவும் முக்கியமானது” என்றார்.

தென்னாப்பிரிக்க அணி

தெம்பா பவுமா, டேவிட் பெடிங்காம், ஜெரால்ட் கோட்ஜி, டோனி ஜீ ஜார்ஜி, மார்கோ யான்சன், கேஷவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியாம் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்ட்சன், கெய்ல் வெரைன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

SCROLL FOR NEXT