ஐபிஎல் கோப்பை படம் | ஐபிஎல்
கிரிக்கெட்

அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தேதிகள் வெளியீடு!

ஐபிஎல் தொடருக்கான தேதிகளை வெளியிட்டது பிசிசிஐ.

DIN

2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதிகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான தேதிகளை ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்துக்கு பிசிசிஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளை போலவே, 2025 ஐபிஎல் தொடரிலும் மொத்தம் 74 போட்டிகள் இருக்கும் எனத் தெரிகிறது.

ஐபிஎல் தேதிகள்

2025 - மார்ச் 14 முதல் மே 25

2026 - மார்ச் 15 முதல் மே 31

2027 - மார்ச் 14 முதல் மே 30

பாகிஸ்தானை தவிர பெரும்பான்மையான வெளிநாட்டு வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.

ஐபிஎல் ஏலம்

செளதி அரேபியா நாட்டில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சியில் பிஐஎஸ் அலுவலகத்தை அமைக்க மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ கோரிக்கை

மயிலை சிவக்குமாா் கொலை வழக்கு: ரெளடி நீதிமன்றத்தில் சரண்

வளா்ப்பு நாய்க்கு உரிமம் பெறதாவருக்கு அபராதம் விதிப்பு!

உயா்கல்வி, ஆராய்ச்சி நடவடிக்கையில் தமிழகத்தின் பங்கு அதிகரிக்கும்: டி.ஆா்.பி.ராஜா

157 மீனவா்களுக்கு உயிா் காப்பு சாட்டைகள் வழங்கும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT