கே.எல்.ராகுல் படம் | AP
கிரிக்கெட்

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு சர்ச்சை; மிட்செல் ஸ்டார்க் கூறியதென்ன?

சர்ச்சைக்குள்ளான கே.எல்.ராகுலின் விக்கெட் குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.

DIN

சர்ச்சைக்குள்ளான கே.எல்.ராகுலின் விக்கெட் குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல். கள நடுவர் ரிச்சர்டு கெட்டில்பாரோ அவுட் கொடுக்காத நிலையில், ஆஸ்திரேலிய அணி மேல்முறையீடு (ரிவ்யூ) செய்தது. இதனையடுத்து, மூன்றாம் நடுவர் ரிச்சர்டு இல்லிங்வொர்த் அவுட் கொடுத்தார்.

மூன்றாம் நடுவரின் இந்த தீர்ப்பு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ரிவ்யூவின்போது, பந்து பேட்டில் படாமல் பேடில் படுவது தெரிகிறது. இருப்பினும், பேட் பேடில் படும்போது எழுந்த ஸ்னிக்கோ மீட்டர் அதிர்வை தவறாக பேட்டில் பட்டதாக நினைத்து இல்லிங்வொர்த் அவுட் கொடுத்துள்ளார். அவர் ஸ்பிளிட் ஸ்கிரின் டெக்னாலஜி இருந்தும், அதனை சரியாக பார்க்காமல் தவறான முடிவைக் கொடுத்துள்ளதாக சர்ச்சையானது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய என இரண்டு அணிகளின் முன்னாள் வீரர்களும் நடுவரின் இந்த தவறான முடிவை விமர்சிக்கத் தொடங்கினர்.

மிட்செல் ஸ்டார்க் கூறியதென்ன?

கே.எல்.ராகுலின் விக்கெட் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதனை வழக்கமான விக்கெட் எனவே நினைத்தேன் என மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மிட்செல் ஸ்டார்க்

இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: களநடுவரின் தீர்ப்பினை மூன்றாம் நடுவர் மாற்றினார். ஆனால், கே.எல்.ராகுலின் விக்கெட்டினை வழக்கமான விக்கெட் எனவே நினைத்தேன். எனக்கு கேட்ட சத்தம் மற்றும் அதன் டைமிங் இவை இரண்டும் அதனை வழக்கான விக்கெட் என நினைக்க வைத்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT