முகப்பு
கிரிக்கெட்

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டதாக நடுவர் ஸ்டீவ் பக்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:33 PM
சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 4:57 PM

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டதாக நடுவர் ஸ்டீவ் பக்னர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக செயல்பட்டு வந்த ஸ்டீவ் பக்னர், கடந்த 2009 ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக மிகவும் மோசமான முடிவை அளித்ததால், ஸ்டீவ் பக்னர் பிரபலமாக அறியப்பட்டவர்.

கடந்த 2003-04 ஆம் ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கருக்கு அப்போது கள நடுவராக செயல்பட்ட ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுத்த முடிவு மிகப் பெரிய சர்ச்சையானது.

Advertisement

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:24 PM

லெக் பிஃபோர் விக்கெட் முறையில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழந்ததார். ஆனால், பந்து ஸ்டம்புக்கு மிகவும் மேலே செல்லும். அப்போது வர்ணணையில் ஈடுபட்டிருந்த வர்ணணையாளரும் மிகவும் மோசமான முடிவு என இதனை விமர்சித்திருப்பார்.

இந்த நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் முடிவை வழங்கிவிட்டதை ஒப்புக்கொண்டுள்ள ஸ்டீவ் பக்னர், அதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக மேற்கிந்தியத் தீவுகள் நடுவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நேர்காணலில் அவர் பேசியதாவது: சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்துவிட்டேன். அந்த விஷயத்தை மக்கள் இன்றுவரை பேசுகிறார்கள். நான் எதற்காக அவுட் கொடுத்தேன்? அவர் உண்மையில் அவுட்டா என்பது தெரியாமல் தவறுதலாக நடந்த விஷயம் அது. வாழ்க்கையில் தவறுகள் நடக்கும். நான் என்னுடைய தவறை ஒப்புக் கொண்டேன். என்னுடைய தவறான முடிவுக்காக வருந்துகிறேன் என்றார்.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:24 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றிலும் ஸ்டீவ் பக்னர் சச்சின் டெண்டுல்கருக்கு தவறுதலாக அவுட் கொடுத்திருப்பார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு கலந்துரையாடல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கரிடம் உங்களுக்கும் நடுவர் ஸ்டீவ் பக்னருக்கும் இடையிலான உறவு எத்தகையது எனக் கேள்வி கேட்கப்பட்டிருக்கும். அதற்கு பதிலளித்த டெண்டுல்கர், நான் பேட்டிங் செய்யும்போது, ஸ்டீவ் பக்னருக்கு குத்துச் சண்டையில் உபயோகிக்கும் கையுறையை கொடுங்கள். அப்படி செய்தால், அவரால், விரல்களை உயர்த்த முடியாது என வேடிக்கையாக பதிலளித்திருப்பார்.

79 வயதாகும் ஸ்டீவ் பக்னர் 1989 மற்றும் 2009 ஆம் ஆண்டு இடைவெளியில் 128 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டுள்ளார். மேலும், 1992 முதல் 2007 வரையில் தொடர்ச்சியாக ஐந்து முறை உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் நடுவராக செயல்பட்டு அவர் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

summary

Umpire Steve Buckner has expressed regret for giving out former Indian cricketer Sachin Tendulkar by mistake.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.