FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!

‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’ என்று நீட் போராட்டத்துக்கு சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 23 ஜூலை 2026, 10:09 pm IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
பகிர்:

‘தோல்விகள் பரவாயில்லை; ஆனால், ஏமாற்றுவது கூடாது’ என்று மாணவர்கள் போராட்டத்துக்கு கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்வு முகமை நடத்தும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு உள்பட பல தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டம் 34-வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்கள், நடிகர் - நடிகைகள், முன்னணி நட்சத்திரங்கள் எனப் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “என்னுடைய தந்தையும் பேராசிரியர்தான். அவர் பல மாணவர்களுக்கு ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது. குறுக்கு வழிகளைப் பயன்படுத்தவேக் கூடாது என்பது அவர் எனக்கு சிறுவயதிலேயே புகட்டிய பாடம்தான்.

பெரியவர்களாக சமூகத்தில் கலாசாரத்தைக் வடிவமைக்கும் பொருட்டு நம்மிடம் இருக்கிறது. முயற்சிகளைவிட முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம் குறுக்கு வழிகளைத்தான் நாடும்.

மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கவில்லை என்று ஏமாற்றம் அடைவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். அவர்கள் மீண்டும் அவ்வாறு நினைக்காமல் இருக்க வேண்டும் என்பதை உறுதிசெய்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

நம் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்துக்காகவும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் முடிவுகளையும் நாம் நிச்சயமாகக் கண்டறிவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Students' disappointment understandable: Tendulkar issues statement on NEET agitation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments