FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஜேபி போராட்டம்! முன்னாள் முதல்வர்கள் கேஜரிவால், மமதா, விஜயன் கைது!

சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவு அளித்த முன்னாள் முதல்வர்கள் கேஜரிவால், மமதா, விஜயன் கைது செய்யப்பட்டனர்.

10 அக்டோபர் 2026, 4:32 pm IST
கேஜரிவால் கைது
பகிர்:

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்த போராட்டத்துக்கு ஆதரவு அளித்த முன்னாள் முதல்வர் கேஜரிவால், மமதா பானர்ஜி, பினராயி விஜயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி தலைவரும் புது தில்லியின் முன்னாள் முதல்வர் கேஜரிவால், தன்னுடைய வீட்டிலிருந்து, ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகப் புறப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்துள்ளனர்.

சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் வாயில் பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு நியாயம் கேட்கும் பதாகையை கழுத்தில் மாட்டிக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜியையும் காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement

Advertisement

கைது செய்து பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட கேஜரிவால், உள்ளிருந்துகொண்டே, விடியோ வெளியிட்டு, போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளார். மேலும், அனைத்து இளைஞர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இன்று காலை முதலே, கேஜரிவாலின் வீட்டைச் சுற்றிலும் காவல்துறை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மாலை வீட்டை விட்டு வெளியே வந்ததும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டத்துக்கு ஆதரவு அளித்த கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மற்றும் கேரள சட்டப்பேரவை உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி அச்சமடைந்திருப்பதையே தங்கள் மீதான கைது நடவடிக்கை காட்டுவதாக பினராயி விஜயன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments