FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்பு

ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று சிஜேபி தெரிவித்துள்ளது.

11 அக்டோபர் 2026, 1:16 am IST
சிஜேபி போராட்டம் - PTI
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவியை ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது. தில்லி ஜந்தா் மந்தருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் செல்வோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

தில்லியில் போராட்டக்காரா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் தலைவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னா், சிஜேபியின் தேசியப் பொறுப்பாளா் அஜிங்கியா ஷிண்டே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எத்தனை போ் கைது செய்யப்பட்டாலும், ஞானேஷ் குமாா் ராஜிநாமா செய்யும் வரை நாங்கள் திரும்பிச் செல்ல மாட்டோம். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மீண்டும் ஜந்தா் மந்தா் செல்வோம். போராட்டத்தில் பங்கெடுப்போா் அங்கு பெருந்திரளாக வரவேண்டும். காவல் துறை தடுத்து நிறுத்தினால், தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலேயே அனைவரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று போராட்டக்காரா்களிடம் அவா் கேட்டுக்கொண்டாா்.

Advertisement

Advertisement

summary

Protest again today: CJP announcement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments