FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஜேபி போராட்டம்: தில்லி, மும்பையில் பலத்த பாதுகாப்பு! மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!

சிஜேபி போராட்டம் எதிரொலியாக தில்லி, மும்பையில் பலத்த பாதுகாப்பு...

தில்லி ஜந்தர் - மந்தரில் பலத்த பாதுகாப்பு - x | ANI
பகிர்:

சிஜேபி போராட்டம் எதிரொலியாக தில்லி மற்றும் மும்பை நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் 2 தேர்தல் ஆணையர்கள் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டவிரோதமான முறையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதையடுத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஏராளமான எதிர்க்கட்சிகள் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியை ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் இன்று மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

மேலும், தில்லியில் ஜந்தா் - மந்தா் 2.0 உள்பட நாடு முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் சிஜேபி அறிவித்துள்ளது.

இதையடுத்து, தில்லி ஜந்தர் - மந்தரில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜன்பத், படேல் சௌக், மத்திய செயலகம், ராஜீவ் செளக், புது தில்லி உள்பட 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பை சிவாஜி பூங்கா நுழைவு வாயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

summary

CJP Protest: Heavy security in Delhi and Mumbai! Metro stations closed!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments