FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

செப். 5 சிஜேபி பேரணி: தில்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

தில்லியில் நடைபெறவுள்ள சிஜேபி பேரணி பற்றி...

1 செப்டம்பர் 2026, 2:12 pm IST
சிஜேபி பேரணி - X
பகிர்:

தில்லியில் செப்டம்பர் 5 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தவுள்ள பேரணியை முன்னிட்டு தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறை தெரிவித்தன.

தில்லியில் ஜந்தர் - மந்தரில் வினாத்தாள் கசிவுக்கு எதிராக சிஜேபி நடத்திய போராட்டத்தைக் கைவிடக் கோரிய மத்திய அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு மாதமாகியும் வழக்குகளை தில்லி காவல்துறை ரத்து செய்யாததைக் கண்டித்து, இந்தியா கேட் முதல் தில்லி காவல் ஆணையர் அலுவலகம் வரை அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று சிஜேபி அறிவித்திருந்தது.

இதனிடையே, இந்தப் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி ஓய்வுபெற்ற தில்லி காவல் அதிகாரி ராஜேந்தர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

Advertisement

Advertisement

சிஜேபி போராட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள பிற மனுக்களுடன் சேர்த்து, இந்த மனு மீதான விரிவான விசாரணையை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 10-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், திட்டமிடப்பட்ட இந்தப் பேரணியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் மற்றும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாகத் தலைநகரில் பாதுகாப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பேரணி நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உச்சிமாநாட்டைக் கருத்தில் கொண்டு, புது தில்லி மாவட்டம் மட்டுமல்லாமல் மத்திய தில்லியின் சில பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடமும், பல முக்கிய அரசு அலுவலகங்களுக்கு அருகிலும் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் பகுதியும் தீவிர பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments