FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு; அமைதிப் பேரணி அறிவித்த சிஜேபி!

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெறும் என சிஜேபி அறிவித்துள்ளது பற்றி...

அமைதிப் பேரணி அறிவித்த சிஜேபி. - படம் - எக்ஸ்
பகிர்:

வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசுக்கு எதிராக அமைதிப் பேரணி நடைபெறும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை (ஆக. 24) அறிவித்துள்ளது.

மத்திய கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூன் 20 இல் சிஜேபி போராட்டம் நடத்தியது. இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று ஜூன் 25 இல் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும், மாணவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு ஜூலை 25 ஆம் தேதி தெரிவித்த நிலையில், சிஜேபியால் போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இருப்பினும், முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவதிலும், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடி வழங்குவதிலும் அரசு காலம் தாழ்த்தி வருவதாக சிஜேபியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சிஜேபி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

ஜூலை 25 ஆம் தேதி கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறியுள்ளது. இதனை சிஜேபி வன்மையாகக் கண்டிக்கிறது. முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவதிலும்கூட மத்திய அரசு தாமதித்து வருகிறது. ஆகையால், இளைஞர்களைக் கூட்டி அமைதிப் பேரணி நடத்த சிஜேபி முடிவு செய்துள்ளது.

அதன்படி, வரும் செப். 5 ஆம் தேதி தில்லியின் இந்தியா கேட்டிலிருந்து காவல்துறை தலைமையகம் வரை அமைதிப் பேரணி நடத்தவுள்ளோம். இந்த அமைதிப் பேரணிக்கு, நீட் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள் மற்றும் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறைக்கு ஆளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தலைமை தாங்குவார்கள்.

அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். எங்களுடைய பொறுமையை அது பலவீனமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

The Cockroach Janata Party (CJP) announced on Monday (Aug. 24) that a peaceful rally would be held against the government for failing to fulfill its promises.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments