மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்!
சிஜேபி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், போராட்டம் வாபஸ் பெற்றுள்ளது கரப்பான் கட்சி.
தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உறுதியளித்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்ற குளருபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராடி வந்தனர்.
கரப்பான் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் வெடித்த இந்த சர்ச்சைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், போலீஸார் அவரை வலுக்கட்டயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து, அவர் வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்ற நிலையில், வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
Advertisement
Advertisement
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வந்த சிஜேபிக்கு இறுதியாக உடன்பாடு எட்டும் வகையில், சிஜேபியினரின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் இன்று பிற்பகல் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இருப்பினும் தான் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கரப்பான் கட்சியின் தலைவர் அபிஜீத் கூறினார்.
இந்த நிலையில், இன்று மாலை மத்திய அரசுடன் சிஜேபி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ. 1 கோடியை வழங்க வேண்டும். ஜூலை 20 அன்று வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மீதமுள்ள இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபியினர் தெரிவித்தனர்.
கரப்பான் ஜனதா கட்சி முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுள்ளதையடுத்து சிஜேபி கட்சி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது. இளைஞர்கள் கலைந்து செல்லுமாறும், வீடு திரும்பலாம் என்றும் சிஜேபி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
The Cockroach Janata Party (CJP) has announced the withdrawal of its protest after the Central Government assured it would fulfill the demands put forward by the party in Delhi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.