FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கை

பல மாநிலங்களில் போராடிய இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு சிஜேபி எச்சரிக்கை...

Updated On : 27 ஜூலை 2026, 12:27 pm IST
கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் - ANI
பகிர்:

மத்திய அரசு தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் மீண்டும் போராட்டம் நடைபெறும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தெரிவித்துள்ளது.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"அசாம், மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், மாணவர்கள் மற்றும் பிற போராட்டக்காரர்கள் குறிவைக்கப்படுவதாகவும் அவர்கள் கைது செய்யப்படுவதாகவும் வரும் தகவல்கள் எங்களுக்கு ஆழ்ந்த கவலை அளிக்கிறது.

Advertisement

Advertisement

பாஜக ஆளும் எந்தவொரு மாநிலத்திலும் இப்போதும் சரி, எதிர்காலத்திலும் சரி எந்தவொரு போராட்டக்காரர் மீதும் தண்டனைக்குரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு எங்களுக்கு உறுதியளித்த பின்னரே சிஜேபி தனது போராட்டத்தை நிறுத்திவைத்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தற்போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள திறமையான வழக்கறிஞர்களுடன் எங்கள் சட்டக் குழு ஏற்கனவே ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள், போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். எங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்தியாய் அரசை, குறிப்பாக ஜெ.பி. நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோரை கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.

இதுதொடர்பாக நாளை (ஜூலை 28) எங்களுக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.

மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை நிறுத்தினோம். அந்த வாக்குறுதியில் இருந்து மத்திய அரசு விலகினால் சிஜேபியின் நம்பிக்கையை மீறுவது மட்டுமின்றி போராட்டங்களுக்குப் பதிலாக பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுத்த லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களின் நம்பிக்கையை மீறுவதாகவும் அமையும். அத்தகைய நம்பிக்கை மீறல் இளைஞர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்குறுதி அளிப்பது மட்டுமின்றி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலமே ஒரு அரசு நம்பகத்தன்மையைப் பெறுகிறது என்பதை நினைவூட்டுகிறோம்.

இளம் போராட்டக்காரர்களிடம் நாங்கள் சொல்வது இதுதான்: உறுதியாக இருங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். சிஜேபி, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. தற்போதைய சூழலுக்குத் தேவையான அவசரம், பொறுப்புணர்வு மற்றும் நல்லெண்ணத்துடன் மத்திய அரசும், பாஜக/என்டிஏ ஆளும் அனைத்து மாநில அரசுகளும் செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

தடுப்பில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாகவும் எக்காரணம் இருந்தாலும் நாளைக்குள்ளும் விடுவிக்கப்பட வேண்டும் அனைத்து வழக்குப்பதிவுகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லையெனில், நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

summary

Next course of action if the Central Government fails to fulfill its promises: CJP

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments