FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிஜேபி போராட்டம்! இன்று பிற்பகலுக்கு பிறகு தில்லி புறப்படும் ரயில்கள் ரத்து!

இன்று பிற்பகலுக்கு பிறகு தில்லி புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுவது பற்றி...

9 அக்டோபர் 2026, 11:12 am IST
ரயில்கள் - கோப்புப்படம்
பகிர்:

சிஜேபி போராட்டம் எதிரொலியாக இன்று பிற்பகலுக்குப் பிறகு தில்லி புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்ய இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடைமுறையில் முறைகேடு செய்ததாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தில்லியில் உள்ள ஜந்தர் - மந்தர் பகுதியில் நாளை (அக். 10) மாபெரும் போராட்டத்துக்கு சிஜேபி கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று பிற்பகலுக்குப் பிறகு தில்லி புறப்படும் அனைத்து ரயில்களும் ரத்து செய்ய இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, இந்திய ரயில்வே துறை ரீதியாக அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், புது தில்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 10 அன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் இவ்விரு நிலையங்களுக்கும் வந்து சேரும் அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களையும் ரத்து செய்ய இந்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

மேலும், வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிக்குள் குறிப்பிட்ட இரு ரயில் நிலையம் வந்தடையவிருந்த அனைத்து மெயில் மற்றும் விரைவு ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு ரயில்வே தரப்பில் இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், அந்தந்த மண்டல ரயில்வே நிர்வாகம், ரத்து தொடர்பான செய்திகளை வெளியிடத் தொடங்கியுள்ளன.

தற்போது, மத்திய ரயில்வேவின் கீழ் இயங்கும் மும்பை மண்டலத்திலிருந்து இன்று தில்லி புறப்படும் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

summary

CJP Protest! Trains departing Delhi after this afternoon cancelled!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments