முகப்பு

காக்ரோச் கிளப்: அரசியல் உரையாடல்களுக்கு தனி மன்றம் தொடங்கிய சிஜேபி!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கட்சி ‘காக்ரோச் கிளப்’ என்ற பெயரில் புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

41 வினாடிகள் முன்பு
காக்ரோச் கிளப்: அரசியல் உரையாடல்களுக்கு தனி மன்றம் தொடங்கிய சிஜேபி!
காக்ரோச் கிளப்
பகிர்:

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கட்சி ‘காக்ரோச் கிளப்’ என்ற பெயரில் புதிய முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

இந்த மன்றம் மூலம் இந்திய இளைஞர்களிடையே அரசியல் மற்றும் கலாச்சாரம் பற்றிய உரையாடல்களை ஊக்குவிக்க உள்ளதாக சிஜேபி தெரிவித்துள்ளது.

மேலும், இதனை இந்தியா முழுவதும் பரவலாகக் கொண்டு செல்லவும் சிஜேபி திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

அபிஜீத் தீப்கேவால் தொடங்கப்பட்ட சிஜேபி ஒரு மக்கள் இயக்கமாக இணையவழி அரசியல் செயல்பாடு மற்றும் மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவது என கவனம் செலுத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிஜேபி முன்னெடுத்த போராட்டத்தால் மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என தில்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி நடத்திய போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காக்ரோச் கிளப் என்ற பெயரில் புதிய முன்னெடுப்பாக மன்றம் ஒன்றைத் தொடங்கியுள்ள சிஜேபி, இளைஞர்களிடையே நேரடியாக அரசியல் தொடர்பான உரையாடல்களை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்துள்ளது.

காக்ரோச் கிளப்பின் முதல் நிகழ்வு, காந்தியின் மரபு என்ற தலைப்பில் நவ. 21 அன்று புனேவில் உள்ள காந்தி பவனில் நடைபெற்றது. இதில், 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஒரு நாள் முழுவதும் கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள் என இந்நிகழ்வு நடைபெற்றது.

சிஜேபி ஒருங்கிணைப்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரன்கா ஆகியோர் ‘காக்ரோச் கிளப்பை’ ஒரு தீவிர மக்கள் செயல்பாடு மற்றும் பொழுதுபோக்கு கலந்த அம்சத்துடன் வடிவமைத்துள்ளனர்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் போன்ற முக்கிய ஆளுமைகள் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்கள் இந்த மன்றத்தின் நிகழ்வுகளில் இடம்பெறுகின்றன.

அதேநேரம் திரைப்படத் திரையிடல்கள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கான இடவசதிகளும் இங்கு அமைத்துத் தரப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வுகளை எதிர்காலத்தில் ஓடிடி தளங்களில் வெளியிடும் வகையில் தொடர்களாக வெளியிடவும் சிஜேபி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் தளங்கள் மூலம் பரந்த பார்வையாளர்களைப் பெற வாய்ப்புள்ளது.

காக்ரோச் கிளப் தனியே எந்த வகையிலும் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படப்போவதில்லை என்றும், இது இளைஞர்களுக்கான சுதந்திரமான உரையாடல் தளமாகச் செயல்படும் என்றும் சிஜேபி தெரிவித்துள்ளது.

summary

Cockroach Club: CJP launches a separate forum for political discussions!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.