FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேசத்தின் நிலமெங்கும் ஜந்தர் மந்தராக மாறவேண்டிய நேரமிது! - சு. வெங்கடேசன் பதிவு!

சிஜேபி நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் கண்டனம்...

22 வினாடிகள் முன்பு
சு. வெங்கடேசன் எம்பி - கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் போராட வந்த பெண்களைத் தாக்கிய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், தேசியக் கொடியுடன் சென்றோரை மத்திய அரசு குற்றவாளிகளாகக் கைது செய்வதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லி உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

இதனால், தில்லியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட இங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தரில் போராட முயன்று கைதான சிஜேபி நிர்வாகிகள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் இன்று (அக். 14) 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சிஜேபி நிர்வாகிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“சிஜேபி ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ், அசுதோஸ் ரங்கா ஆகிய இருவருக்கும் 5 நாள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

வாக்குத் திருட்டைக் கண்டித்துப் போராட வந்த பெண்களின் உடைகளைக் கிழித்துத் தாக்கிய குண்டர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை. மாறாக, அவர்களை வலதுசாரி அமைப்புகள் மாலையிட்டு வரவேற்று, கொண்டாடி வருகின்றன.

ஆனால், ஜந்தர் மந்தருக்குத் தேசியக் கொடியுடன் சென்றவர்களையோ குற்றவாளிகளாகக் கைது செய்கிறது மோடி-ஷா அரசு.

தேசத்தின் நிலமெங்கும்
ஜந்தர் மந்தராக மாறவேண்டிய நேரமிது” எனக் கூறியுள்ளார்.

summary

Su. Venkatesan has condemned the imprisonment of office-bearers of the CJP who were arrested while attempting to stage a protest at Jantar Mantar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments