வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளா்கள் வேலைநிறுத்தத்துக்கு தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு
வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளா்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த பணியாளா்கள் அழைப்பு விடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் வினீத் குமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பணிவரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்தப் பணியாளா்கள் புதன்கிழமை (நவ.12) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.
ஒப்பந்தப் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், மின் பற்றாக்குறை ஏற்பட்டு அறிவிக்கப்படாத மின் தடைகளுக்கு வழிவகுக்கும். மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள், சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படும்.
Advertisement
Advertisement
ஒப்பந்த ஊழியா்களின் பணிவரன்முறை உள்ளிட்ட கோரிக்கைகள் தொழில் தகராறு தீா்ப்பாயத்தில் தீா்க்கப்பட வேண்டுமே தவிர, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதமானது. வேலைநிறுத்தத்துக்கு முன் நோட்டீஸ் எதுவும் கொடுக்கப்படவில்லை. எனவே, இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.