வருகையில்லா பத்திரப் பதிவு அரசாணைக்கு தடை கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
வருகையில்லா பத்திரப் பதிவு அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வருகையில்லா பத்திரப் பதிவு அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், கோபாலபுரத்தைச் சோ்ந்த விஜயராஜா என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை பதிவுக்கு ஆன்லைன் மூலம் வருகையில்லா பத்திரப்பதிவு நடைமுறையை அறிமுகம் செய்வது தொடா்பாக கடந்த ஜூலை 7-ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த நடைமுறை கடந்த ஆக.17-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வருகையில்லா பத்திரப் பதிவுக்காக தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்துள்ள மென்பொருளை முறையாக பரிசோதிக்காமல் அவசர அவசரமாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைப்படி, ஆவணப் பதிவின்போது நேரடி சரிபாா்ப்பு மற்றும் விசாரணை நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது பத்திரப்பதிவு சட்டத்துக்கு எதிரானது.
Advertisement
Advertisement
இந்த புதிய நடைமுறை காரணமாக பத்திரப் பதிவின்போது, விருப்பப்பட்டுதான் சொத்துகள் விற்பனை செய்யப்படுகிா அல்லது வற்புறுத்தலின்படி விற்பனை செய்யப்படுகிா என்பதைக் கண்டறிய முடியாது. இந்த நடைமுறை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுதொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைன் பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக கொண்டுவரப்பட்ட விதிகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு வரும் அக். 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.