சச்சின் டெண்டுல்கரிடமிந்து வந்த அழைப்பு... உலகக் கோப்பை நினைவைப் பகிர்ந்த ஜெமிமா!
உலகக் கோப்பைத் தொடரின்போது சச்சின் டெண்டுல்கரிடமிருந்து வந்த அழைப்பு குறித்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரின்போது சச்சின் டெண்டுல்கரிடமிருந்து வந்த அழைப்பு குறித்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 127 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் கொடுத்த ஆலோசனைகள் தன்னுடைய கவனத்தை மேம்படுத்த உதவியதாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் ஜியோஹாட்ஸ்டாரில் பேசியதாவது: சச்சின் சார் என்னுடைய பயிற்சியாளர் பிரசாந்த் ஷெட்டியிடம் தொலைபேசியில் பேசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜெமிமா சிறப்பாக விளையாடினார் என்பதை அவரிடம் கூறுங்கள். ஆனால், இந்திய அணியின் வேலை இன்னும் முடியவில்லை என்பதையும் அவரிடம் கூறுங்கள். நாம் இன்னும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டியிருக்கிறது.
இதுவரை விளையாடியதை எல்லாம் மறந்துவிட்டு, மீண்டும் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்கச் சொல்லுங்கள் என என்னிடம் கூறுமாறு என்னுடைய பயிற்சியாளரிடம் கூறினார். அவரது அந்த அறிவுரை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இறுதிப்போட்டிக்கு முன்பாக சச்சின் டெண்டுல்கரிடமிருந்து கிடைத்த இந்த அறிவுரை இறுதிப்போட்டிக்கு முன்பாக எனக்கு தெளிவைக் கொடுத்தது என்றார்.
கடந்த ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
Indian player Jemimah Rodrigues has shared memories of a call she received from Sachin Tendulkar during the World Cup tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.