ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

“பொறுத்திருந்து பார்ப்போம்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ஜோஸ் பட்லர்!

ஐபிஎல் மெகா ஏலம் குறித்து இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.

DIN

ஐபிஎல் மெகா ஏலம் குறித்து இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார்.

அபு தாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அசத்தினார். சென்னை ப்ரேவ் ஜாகுவர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அசத்தினார். அவர் அதிரடியாக 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம்

அபு தாபி டி10 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர், ஐபிஎல் மெகா ஏலம் குறித்து பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: அபு தாபியில் இங்கு டி10 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன். ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளேன். ஐபிஎல் மெகா ஏலத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டி10 கிரிக்கெட் லீக்கில் இதற்கு முன் ஒருபோதும் நான் விளையாடியது கிடையாது. ஆனால், இன்று மைதானத்துக்குள் நுழைந்தது முதல் மிகவும் உற்சாகமாக இருந்தது. டி10 கிரிக்கெட்டில் பல சிறந்த வீரர்கள் விளையாடுகிறார்கள். நிக்கோலஸ் பூரன் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்களுடன் டிரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்துகொள்வது சிறப்பாக உள்ளது. டி10 கிரிக்கெட் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெரிடேஜ் ஃபுட்ஸ் வருவாய் 5% அதிகரிப்பு!

ரத்தக் கொதிப்பில்தான் கருப்புப் பட்டை அணிந்தோம்: இபிஎஸ்

கூகுளுடன் கைகோக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏஐ தொழில்நுட்பத்தில் இசை!

பாக்., - ஆப்கன் எல்லை மோதல்! 48 மணிநேர போர் நிறுத்தம் அமல்!

தம்மம் புரமோஷன்... ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT