இரட்டைச் சதம் அடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான்...  படங்கள்: எக்ஸ் / பிசிசிஐ டொமஸ்டிக்
கிரிக்கெட்

சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம்..! இரானி கோப்பையில் புதிய சாதனை!

இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சர்ஃபராஸ் கான் இரட்டைச் சதம் அடித்துள்ளார்.

DIN

மும்பையைச் சேர்ந்த 26 வயதான சர்ஃபராஸ் கான் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ரஞ்சி கோப்பையில் 2019-2020இல் 928 ரன்கள், 2021-2022இல் 982 ரன்கள் எடுத்து அசத்தினார்.

தற்போது இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக மும்பை அணி பேட்டி செய்து வருகிறது. மும்பை அணிக்கு ரஹானே கேப்டனாகவும் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு ருதுராஜ் கேப்டனாகவும் செயல்படுகிறார்கள்.

முதல் நாள் முடிவில் மும்பை 237/4 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 2ஆம் நாளில் 128 ஓவர் முடிவில் 486/8 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃபராஸ் கான் 255 பந்துகளில் 200 ரன்களுடனும் ஷர்துல் தாக்குர் 9 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

இத்துடன் சர்ஃபராஸ் கானின் முதல்தர கிரிக்கெட்டில் 16 சதங்களும் 14 அரைசதங்களும் அடங்கும்.

இரானி கோப்பையில் சதமடித்த முதல் மும்பையர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

கிளை நூலகருக்கு விருது

பாராட்டு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT