கிரிக்கெட்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வீராங்கனைகளுக்கான ‘ஏஐ’ அறிமுகம்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைவீராங்கனைகளுக்கான ஏஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மகளிர் டி20 உலகக் கோப்பை வீராங்கனைகளுக்கான ஏஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மகளிர் டி20 உலகக் கோப்பை இன்று (அக்டோபர் 3) ஐக்கிய அமீரகத்தில் தொடங்குகிறது. வீராங்கனைகளின் சமூக வலைதள ஊடக கணக்குகளை தவறான கருத்துகளில் இருந்து பாதுகாக்கும் விதமாக புதிய செய்யறிவு(ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இன்று தொடங்கும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.

இந்தச் செய்யறிவு கருவி கோ-பபுல் என்னும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ ஐசிசி மற்றும் வீராங்கனைகளின் சமூக ஊடக கணக்குகளில் தவறான கருத்துகளில் இருந்து காப்பாற்றவும், வீராங்கனைகளின் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐசி இணையப் பிரிவின் தலைவர் ஃபின் பிராட்ஷா கூறுகையில், “ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நேர்மறையான சூழலை உருவாக்குவதில் நாங்கள் உறுதிகொண்டுள்ளோம். வீராங்கனைகள் மற்றும் அணிகள் எங்கள் புதிய முயற்சியை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 60-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் ஏற்கனவே சமூக ஊடக பாதுகாப்புக்கான ஏஐ சேவையை தேர்வு செய்துள்ளனர்’ என்றார்.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி வீராங்கனை சினாலோ ஜாஃப்டா கூறுகையில், “தோல்விக்குப் பிறகோ அல்லது வெற்றிக்குப் பிறகோ உங்கள் தொலைபேசியைத் திறப்பதைவிட மோசமானது எதுவுமில்லை. மேலும், நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும் உங்கள் தலைமையைப் பற்றி சில தவறான கருத்துகள் எப்போதும் இருக்கும்.

எனக்கான அந்தப் பாதுகாப்பு மிகவும் பெரியது. ஏனென்றால் வீரர்கள் தங்கள் வாழ்க்கையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதனால், ரசிகர்கள் உங்கள் வாழ்க்கை எடைபோடுவார்கள் அல்லது விமர்சிப்பார்கள்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT