டு பிளெஸ்ஸி 
கிரிக்கெட்

சிபிஎல்: முதல்முறையாக கோப்பையை வென்ற அணி..! டு பிளெஸ்ஸி கூறியதென்ன?

கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) டு பிளெஸ்ஸியின் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை கோப்பையை வென்றுள்ளது.

DIN

கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) டு பிளெஸ்ஸியின் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை கோப்பையை வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் ஹிம்ரான் தாஹிர் தலைமையிலான அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 138/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரிடோர்யஸ் 25, ஷாய் ஹோப் 22 ரன்கள் எடுத்தார்கள்.

அடுத்து விளையாடிய செயிண்ட் லூசியா அணி 18.1 ஓவரில் 139/4 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் ஆரோன் ஜோன்ஸ் 48, ரோஸ்டன் சேஸ் 39 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்கள்.

சிபிஎல் வரலாற்றில் செயிண்ட் லூசியா அணி முதல்முறையாக கோப்பையை வென்றது. மெஸ்ஸி, ரோஹித் சர்மா பாணியில் டு பிளெஸ்ஸி கொண்டாடினார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் டு பிளெஸ்ஸி கூறியதாவது:

என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு - பிலிப் 4:13.

செயிண்ட் லூசியா அணிக்கு முதல் கோப்பை. தொடக்கத்தில் இந்த அணியைப் பார்த்து யாரும் கோப்பையை வெல்லுவார்கள் எனக் கூறவில்லை. ஆனால், அணியின் முயற்சியினாலும் எங்களது நம்பிக்கையினாலும் இதைச் சாத்தியமாக்கினோம். அணியினைரை நினைத்து பெருமையாக இருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT