கிரிக்கெட்

டெஸ்டில் அதிக 150* ரன்கள்: ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்!

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார்.

DIN

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமன் செய்தார். மேலும், அவர் வீரேந்திர சேவாக், ஜாக் காலிஸ், ஸ்டீவ் வாக் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்தார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 556 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அடுத்து தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 97 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோ ரூட் 172* ரன்களும், ஹாரி புரூக் 132* ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் 150 ரன்களைக் கடந்த போது ஜோ ரூட் அதிக 150 ரன்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 150* ரன்கள் அடித்தவர்கள்

  1. சச்சின் டெண்டுல்கர் -20

  2. பிரையன் லாரா -19

  3. குமார் சங்ககரா -19

  4. டான் பிராட்மேன் -19

  5. எம் ஜெயவர்த்தனே -16

  6. ஜோ ரூட் -15*

  7. ரிக்கி பாண்டிங் -15

  8. வீரேந்திர சேவாக் -14

  9. ஜாக் காலிஸ் -14

  10. ஸ்டீவ் வாக் -14

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி மது விற்பனை: இலக்கை தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை!

தீபாவளி பட்டாசு புகை: விமானங்கள் பல மணி நேரம் தாமதம்

மீண்டும் அணுசக்தி பேச்சு: டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஈரான்

ராவல்பிண்டி டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்

நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி மும்முடங்கு அதிகரிப்பு: பிரதமா் மோடி பெருமிதம்

SCROLL FOR NEXT