இங்கிலாந்து அணி Anjum Naveed
கிரிக்கெட்

பாக். டெஸ்ட்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி..!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

DIN

பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.7ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 556 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. 

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து வியாழக்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.

இதையடுத்து, 2ஆம் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 220 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

ஜேக் லீச் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாகிஸ்தான் சார்பாக அதிகபட்சமாக அஹா சல்மான் 63, ஆமிர் ஜமால் 55 ரன்கள் எடுத்தார்கள்.

ஹாரி புரூக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணி தனது சொந்த மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT