ஜஸ்பிரீத் பும்ரா , ரோஹித் சர்மா 
கிரிக்கெட்

துணை கேப்டனாக பும்ரா..! சரியான தேர்வா? ரோஹித் சர்மா கூறியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன...

DIN

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரோஹித் சர்மா பேசியதென்ன...

நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்.16) சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கான முதல் சில டெஸ்ட்டில் ரோஹித் விலகுவதாக இருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கலாமென பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

பும்ரா அதிகமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். நானும் அவருடன் சேர்ந்து அதிகமாக விளையாடியிருக்கிறேன். ஆட்டத்தின் போக்கை சரியாக புரிந்துகொள்வார். சிறந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர். அவருடன் பேசும்போது, ஆட்டத்தினை சரியாக புரிந்துகொண்டிருப்பது தெரியும்.

பும்ரா கேப்டனாக அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை. அதனால், என்னால் அது குறித்து பேச முடியாது. 1 டெஸ்ட் போட்டி, சில டி20களில் மட்டுமே பும்ரா கேப்டனாக செயல்பட்டுள்ளாரென நினைக்கிறேன்.

அணிக்கு தேவையானதை புரிந்துகொள்வார். கடினமான சூழநிலையில் தலைவன் ஒருவன் தன்னை முன்னிருத்த வேண்டுமானால் நிச்சயமாக பும்ரா அந்த நபர்களில் இருவராக இருப்பார். அதனால், முந்தைய காலங்களில் பும்ரா எங்களது முடிவெடுக்கும் தலைமையிலான குழுவில் இருந்துள்ளார்.

புதியதாக அணியில் ஒரு பந்துவீச்சாளர் வந்தால் அவரிடம் பேசுவதாகட்டும் அல்லது அணியாக அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவதாகட்டும் பும்ரா எப்போதும் எங்களது முடிவெடுக்கும் தலைமையிலான குழுவில் இருந்துள்ளார். அதனால் அவர் இந்த மாதிரி விஷயங்களில் முடிவெடுக்க சிறந்த நபராக இருப்பார் என்றார்.

பும்ரா கேப்டனாக செயல்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT