இரு அணி கேப்டன்கள். Shailendra Bhojak
கிரிக்கெட்

பெங்களூரு டெஸ்ட்: நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

இந்தியா - நியூஸிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி பற்றி..

DIN

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்கவிருந்த நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாம் நாளான இன்று காலை டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் 7 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், டிம் செளதி பந்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2 ரன்களுக்கு அவுட்டாகியுள்ளார்.

முதல் நாள் ஆட்டம் இழந்ததை ஈடுசெய்யும் விதமாக, 2-ஆவது நாள் ஆட்டத்தில் முதல் இரு செஷன்களில் கூடுதலாக 15 நிமிஷங்கள் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. டாஸ் 8.45 மணியளவில் வீசப்பட்டு, ஆட்டம் 9.15 மணியளவில் தொடங்கியது. எனினும், இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT