விராட் கோலி, ரிஷப் பந்த்.  
கிரிக்கெட்

ஐசிசி தரவரிசை: விராட் கோலியை முந்தினார் ரிஷப் பந்த்!

ஐசிசியின் டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி 6ஆம் இடத்தைப் பிடித்தார் ரிஷப் பந்த்.

DIN

ரிஷப் பந்த் இதுவரை 36 போட்டிகளில் 2,551 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 சதங்கள், 12 அரைசதங்கள் அடங்கும். 90-100 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இது 7ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த் 62 இன்னிங்ஸில் 2,500 ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்பாக எம்.எஸ்.தோனி 69 இன்னிங்ஸில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார்.

இந்நிலையில் ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐசிசியின் டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ரிஷப் பந்த். விராட் கோலி 8ஆவது இடத்துக்குப் பின் தங்கியுள்ளார்.

இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4ஆவது இடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் 917 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

1. ஜோ ரூட் - 917 புள்ளிகள்

2. கேன் வில்லியம்சன் - 821 புள்ளிகள்

3. ஹாரி புரூக் - 803 புள்ளிகள்

4. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 780 புள்ளிகள்

5. ஸ்டீவ் ஸ்மித் - 757 புள்ளிகள்

6. ரிஷப் பந்த் - 745 புள்ளிகள்

7. உஸ்மான் கவாஜா - 728 புள்ளிகள்

8. விராட் கோலி - 720 புள்ளிகள்

9. மார்னஸ் லபுஷேன் - 720 புள்ளிகள்

10. கமிந்து மெண்டிஸ் - 716 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

கோவையில் கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! | செய்திகள்: சில வரிகளில் | 03.11.25

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து 45 பாலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

சிறப்பு தீவிர திருத்தம்: உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

SCROLL FOR NEXT