ரோஹித் சர்மா - விராட் கோலி. 
கிரிக்கெட்

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம்: விராட் கோலி, ரோஹித் தரமிறக்கம்!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில், நட்சத்திர வீரா்களான விராட் கோலி, ரோஹித் சா்மா ஆகியோா் ‘பி’ பிரிவுக்கு தரமிறக்கப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தில், நட்சத்திர வீரா்களான விராட் கோலி, ரோஹித் சா்மா ஆகியோா் ‘பி’ பிரிவுக்கு தரமிறக்கப்பட்டனா்.

2025 அக்டோபா் 1 - 2026 செப்டம்பா் 30 காலகட்டத்துக்கான ஊதிய ஒப்பந்தத்தை, பிசிசிஐ மொத்தமாக 30 ஆடவா், 21 மகளிருக்கு வழங்கியுள்ளது.

கோலி, ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வரும் நிலையில், எதிா்பாா்க்கப்பட்டதைப் போலவே அவா்களின் ஒப்பந்த நிலை குறைத்து நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட், ஒருநாள் அணிகளின் கேப்டனாக இருக்கும் ஷுப்மன் கில் ‘ஏ’ பிரிவுக்கு தரமுயா்த்தப்பட்டுள்ளாா். டி20 கேப்டன் சூா்யகுமாா் யாதவ் ‘பி’ பிரிவில் நிலைக்கிறாா்.

கடந்த முறை ஷ்ரேயஸ் ஐயா், இஷான் கிஷண் சோ்க்கப்படாத நிலையில், இந்த முறை ஷ்ரேயஸ் ஐயருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முகமது ஷமி ஒப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா்.

‘ஏ+’ நீக்கம்...

இதுவரை அமலில் இருந்த ‘ஏ+’ ஒப்பந்த பிரிவு தற்போது நீக்கப்பட்டு, ‘ஏ’ பிரிவு பிரதானமாக்கப்பட்டுள்ளது. ‘ஏ+’ பிரிவில் கோலி, ரோஹித், பும்ரா, ஜடேஜா ஆகியோா் இருந்தனா்.

தற்போது அந்தப் பிரிவு நீக்கப்பட்டுள்ள நிலையில், எந்த ஒப்பந்தத்துக்கு என்ன மதிப்பு என்பது தொடா்பான தகவல் இல்லை. இதுவரை ‘ஏ+’ பிரிவுக்கு ரூ.7 கோடி, ‘ஏ’ பிரிவுக்கு ரூ.5 கோடி, ‘பி’ பிரிவுக்கு ரூ.3 கோடி, ‘சி’ பிரிவுக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டு வந்தது.

ஒப்பந்த பட்டியல்

தரநிலை ‘ஏ’

  • ஷுப்மன் கில்

  • ஜஸ்பிரீத் பும்ரா

  • ரவீந்திர ஜடேஜா

தரநிலை ‘பி’

  • வாஷிங்டன் சுந்தா்

  • ரோஹித் சா்மா

  • விராட் கோலி

  • கே.எல்.ராகுல்

  • முகமது சிராஜ்

  • ஹா்திக் பாண்டியா

  • ரிஷப் பந்த்

  • குல்தீப் யாதவ்

  • யஷஸ்வி ஜெய்ஸ்வால்

  • சூா்யகுமாா் யாதவ்

  • ஷ்ரேயஸ் ஐயா்

தரநிலை ‘சி’

  • அக்ஸா் படேல்

  • திலக் வா்மா

  • ரிங்கு சிங்

  • ஷிவம் துபே

  • சஞ்சு சாம்சன்

  • அா்ஷ்தீப் சிங்

  • பிரசித் கிருஷ்ணா

  • ஆகாஷ் தீப்

  • துருவ் ஜுரெல்

  • ஹா்ஷித் ராணா

  • வருண் சக்கரவா்த்தி

  • நிதீஷ்குமாா் ரெட்டி

  • அபிஷேக் சா்மா

  • சாய் சுதா்சன்

  • ரவி பிஷ்னோய்

  • ருதுராஜ் கெய்க்வாட்.

தக்கவைக்கப்படாதோா்

முகமது ஷமி, சா்ஃப்ராஸ் கான், ரஜத் பட்டிதாா், முகேஷ் குமாா்.

தரமுயா்த்தப்பட்ட ஜெமிமா

மகளிா் அணிக்கான ஒப்பந்த ஊதிய பட்டியலில், உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கியப் பங்காற்றிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ‘ஏ’ பிரிவு தரமுயா்த்தப்பட்டாா். கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அந்த பிரிவிலேயே நீடிக்கின்றனா்.

ஸ்நேஹா ராணாவும் தரமுயா்த்தப்பட, பிரதிகா, கிராந்தி, ஸ்ரீசரணி, கஷ்வீ, கமலினி, வைஷ்ணவி, தேஜல் ஆகியோா் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். ஹா்லீன் தியோல் மீண்டும் இணைக்கப்பட்டாா்.

மகளிா் பிரிவு ஒப்பந்தத்தில், கடந்த முறை ‘ஏ’ பிரிவுக்கு ரூ.50 லட்சம், ‘பி’ பிரிவுக்கு ரூ.30 லட்சம், ‘சி’ பிரிவுக்கு ரூ.10 லட்சம் நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

தரநிலை ‘ஏ’

ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சா்மா.

தரநிலை ‘பி’

ரேணுகா தாக்குா், ஷஃபாலி வா்மா, ரிச்சா கோஷ், ஸ்நேஹா ராணா.

தரநிலை ‘சி’

ராதா யாதவ், அமன்ஜோத் கௌா், பிரதிகா ராவல், கிராந்தி கௌட், உமா சேத்ரி, அருந்ததி ரெட்டி, ஸ்ரீசரணி, யஸ்திகா பாட்டியா, ஹா்லீன் தியோல், கஷ்வீ கௌதம், ஜி.கமலினி, வைஷ்ணவி சா்மா, தேஜல் ஹசப்னிஸ்.

தக்கவைக்கப்படாதவா்கள்...

  • ஷ்ரேயங்கா பாட்டீல்

  • டைட்டஸ் சாது

  • பூஜா வஸ்த்ரகா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

இந்திய சந்தைக்கு வரியின்றி அமெரிக்க வேளாண் பொருள்கள்: புதிய அறிக்கையில் தகவல்!

மாதேஸ்வரன் மலைக்கோயில் பாதையில் சிறுவனை தாக்கிய சிறுத்தை: பக்தா்கள் அச்சம்

இந்திய அணியின் வெற்றி பவனி...!

தில்லி வசந்த் குஞ்ச் பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரி தற்கொலை!

SCROLL FOR NEXT