நியூசி. வீரர் கான்வே, இந்திய வீரர் விராட் கோலி.  Kunal Patil
கிரிக்கெட்

சுழலுக்கு ஏற்ற ஆடுகளம்: உணவு இடைவேளை; அஸ்வின் 2 விக்கெட்டுகள்!

புணேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி உணவு இடைவேளை வரை 92/2 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறும் நிலையில், பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் நியூஸிலாந்து அபார வெற்றிபெற்றது. 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் நியூஸிலாந்து வென்றது.

இந்நிலையில் நியூசிலாந்து அணி உணவு இடைவேளை வரை 31ஓவர்களுக்கு 92/2 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

டெவான் கான்வே 47 (108 பந்துகள் 5*4) ரன்களுடனும் ரச்சின் ரவீந்திரா 5 (13 பந்துகளில்) களத்தில் இருக்கிறார்கள்.

டாம் லாதம் 15, வில் யங் 18 ரன்களுக்கு அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார்கள்.

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாட் ஹென்றிக்குப் பதிலாக மிட்செல் சான்ட்னர் அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT