மெஹிதி ஹாசன் மிராஸ் படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்

வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் என மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.

DIN

வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் என மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வங்கதேசத்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

பேட்ஸ்மேன்களுக்கு அதிக பொறுப்பு தேவை

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் முன்வரிசை ஆட்டக்காரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

இந்த நிலையில், வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும் என மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது, போட்டி வங்கதேசத்துக்கு சாதகமாக இருந்தது. ஆனால், முதல் நாளின் இரண்டாவது செஷனில் நாங்கள் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட்டோம். டெஸ்ட் கிரிக்கெட்டில், முதல் இன்னிங்ஸில் ரன்கள் குவிப்பது மிகவும் முக்கியம். முதல் இன்னிங்ஸில் ரன்கள் குறைவாக எடுத்தது பந்துவீச்சாளர்களின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, அவரைத் தொடர்ந்து களமிறங்கும் பேட்ஸ்மேன்களின் வேலை மிகவும் எளிதாக மாறுகிறது. குறைவான ரன்களுக்கு ஆட்டமிழப்பது பந்துவீச்சாளர்களின் வேலையை மிகவும் கடினமாக்குகிறது. அழுத்தமான சூழல்களில் விளையாடுவதை எப்போதும் விரும்புவேன். ஏனெனில், அழுத்தமான சூழலை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி அணியின் ஹீரோவாக மாறலாம் என்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் மெஹிதி ஹாசன் மிராஸ் 97 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT