ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

259 ரன்களுக்கு ஆட்டமிழந்த நியூசிலாந்து; ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புணேவில் இன்று (அக்டோபர் 24) தொடங்கியது.

நியூசிலாந்து - 259/10

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெவான் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஏமாற்றமளித்த ரோஹித் சர்மா

நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 16 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 10 ரன்களுடனும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணி நியூசிலாந்தைக் காட்டிலும் 243 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 22 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா

வடமேற்கு தில்லியில் 1.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 போ் கைது!

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

SCROLL FOR NEXT