படம் | AP
கிரிக்கெட்

இந்திய அணி பயந்துவிட்டது; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி மூன்று மாற்றங்களை மேற்கொண்டுள்ளது தொடர்பாக...

DIN

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி பயத்தின் காரணமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (அக்டோபர் 24) புணேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற கே.எல்.ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டாவது போட்டியில் இடம்பெறவில்லை. ஷுப்மன் கில் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். குல்தீப் யாதவுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவனில் கே.எல்.ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரில் யார் இடம்பெறப்போகிறார் என்ற சந்தேகம் இருந்த நிலையில், அணி நிர்வாகம் சர்ஃபராஸ் கானை பிளேயிங் லெவனில் சேர்த்துள்ளது. முகமது சிராஜுக்குப் பதில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

பயத்தினால் எடுக்கப்பட்ட முடிவு

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்திய அணி பயத்தின் காரணமாக மூன்று மாற்றங்களை செய்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய அணி பயத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக உணர்கிறேன். அணியின் பிளேயிங் லெவனில் அடிக்கடி 3 மாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது.

அணியில் உள்ள வீரர்களுக்கு காயம் ஏற்படும் என்ற சூழல் இருந்தால் மட்டுமே, இதுபோன்ற முடிவுகளை எந்த ஒரு அணியும் எடுக்கும். அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டதிலிருந்து இந்திய அணி அதன் பேட்டிங் குறித்து கவலைப்படுவது தெளிவாக தெரிகிறது. வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சைவிட அவரது பேட்டிங் இந்திய அணிக்கு பின்வரிசையில் மிகவும் தேவைப்படுகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT