உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் உலக சாதனை படைத்த அஸ்வின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்த டெஸ்டில் 2 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சிறப்பாக விளையாடி வந்த கான்வே விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளார்.
Advertisement
Advertisement
189 விக்கெட்டுகளுடன் அஸ்வின் முதலிடத்திலும் இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் 187 விக்கெட்டுகளுடனும் இருக்கிறார்.
இதனை தமிழ்நாட்டு கிரிக்கெட் அசோசியன் தனது எக்ஸ் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளது.
அஸ்வின் மொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 530 விக்கெட்டுகள் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்று பட்டியலில் முதலிடம் பிடித்த அஸ்வின்
அஸ்வின் -189 (சமீபத்தில் கான்வே விக்கெட்டினை வீழ்த்தினார்)
லயன் - 187
கம்மின்ஸ் -175
ஸ்டார்க் - 147
பிராட் - 134
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.