பாகிஸ்தான் அணி  Anjum Naveed
கிரிக்கெட்

தொடரை வென்றது பாகிஸ்தான் அணி! பாக். நிகழ்த்திய சாதனை விவரங்கள்!

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24இல் ராவல்பிண்டியில் தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி, 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் 344 ரன்கள் குவித்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

3ஆம் நாளில் மீதமிருந்த 7 விக்கெட்டுகளை விரைவிலேயே இழந்தது இங்கிலாந்து. 36 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் 37/1 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரை 2-1 என பாக். வெற்றி பெற்றது. சௌத் ஷகில் ஆட்டநாயகனாகவும், சஜித் கான் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

சாதனை விவரங்கள்

  • சொந்த மண்ணில் 2021க்குப் பிறகு தொடரை வென்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி.

  • முதல் டெஸ்ட் தோல்வியுற்றும் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை. முதல்முறையாக 1995இல் ஜிம்பாப்வேயுடன் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

  • 2015க்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் முதல் வெற்றியும் இதுவே.

  • பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் சுழல் பந்து வீச்சாளர்களால் அதிக விக்கெடுகள் எடுத்ததும் இதுவே முதல்முறை.

73 விக்கெட்டுகள் - 2024இல் இங்கிலாந்துடன்

71 விக்கெட்டுகள் - 1969இல் நியூசிலாந்துடன்

68 விக்கெட்டுகள் - 2022இல் இங்கிலாந்துடன்

60 விக்கெட்டுகள்- 1987இல் இங்கிலாந்துடன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT