ககிசோ ரபாடா படம்: ஐசிசி
கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரபாடா..! பும்ரா பின்னடைவு!

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தெ.ஆ. அணியின் ரபாடா சிறப்பாக விளையாடியதால் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

DIN

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியதால் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ராபாடா 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 29 வயதாகும் ககிசோ ரபாடா 300 டெஸ்ட் விக்கெட்டுகளை சமீபத்தில் கடந்தார். மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தார்.

2018ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10க்குள் நுழைந்துள்ளார். பும்ரா, அஸ்வின் பின்னடைவை சந்தித்துள்ளார்கள்.

மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44ஆவது இடத்துக்கு வந்துள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017ஆம் ஆண்டு 39ஆவது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.

தரவரிசைப் பட்டியல்

1. ககிசோ ரபாடா - 860 புள்ளிகள்

2. ஜோஷ் ஹேசல்வுட் - 847 புள்ளிகள்

3. ஜஸ்பிரீத் பும்ரா- 846 புள்ளிகள்

4. ரவி அஸ்வின் - 831 புள்ளிகள்

5. பாட் கம்மின்ஸ் - 820 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT