ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் கோப்புப் படம்
கிரிக்கெட்

இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் டி20யில் அறிமுகம்!

அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுகிறார்.

DIN

22 வயதாகும் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முதல்முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் தில்லி அணிக்காக விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் பிரபலமானார்.

9 போட்டிகளில் விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் 330 ரன்கள் எடுத்துள்ளார். குறிப்பாக அவரது ஸ்டிரைக் ரேட் 234.04 என்பது குறிப்பிடத்தக்கது.

பயமறியாமல் அதிரடியாக விளையாடும் இவருக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம். டி20 உலகக் கோப்பையில் பேக்-அப் வீரராக (மாற்று வீரர்) தேர்வு செய்யப்பட்டார். ஆனால் வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை.

தற்போது ஆஸ்திரேலிய அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.

முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஸ்காட்லாந்து அணி 6 ஓவர் முடிவில் 56/2 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய அமைச்சர் Rajnath Singh சிங்குடன் விண்வெளி நாயகன் Subhanshu Shukla!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி வெளியீட்டுத் தேதி!

தவெக மாநாடு: தொண்டர்கள் 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT