இஷான் கிஷன் கோப்புப் படம்
கிரிக்கெட்

இஷான் கிஷன் சதம்! இந்தியா சி அணி 357 ரன்கள் குவிப்பு!

துலீப் கோப்பையின் இந்தியா சி அணியின் 2ஆவது போட்டியின் முதல்நாளில் 357 ரன்கள் குவித்துள்ளது.

DIN

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை (செப்.5) முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்தியா ஏ,பி,சி,டி என 4 அணிகள் விளையாடுகின்றன. ஏ அணிக்கு ஷுப்மன் கில் ( தற்போது மயங்க் அகர்வால்) , பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டி அணிக்கு ஸ்ரேயாஷ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகிறார்கள்.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற ருதுராஜ் அணி தற்போது 2ஆவது போட்டியில் பி அணியுடன் விளையாடி வருகிறது.

சதமடித்த இஷான் கிஷன்

இதில் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 111 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.

புஜ்ஜி பாபு தொடரிலும் முதல்போட்டியில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இல்லாதது, என பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வந்த இஷான் கிஷனின் பேட்டிங்கை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

357 ரன்கள் குவிப்பு

மேலும் இந்த அணியில் பாபா இந்திரஜித் 78, சாய் சுதர்ஷன் 43, ரஜத் படிதார் 40, ருதுராஜ் ஜெய்க்வார் 46* ரன்கள் எடுத்துள்ளார்கள்.

இந்தப் போட்டியில் முதல்நாள் முடிவில் 357/5 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா பி அணியில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும் நவ்தீப் சைனி, ராகுல் சஹார் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

திருவண்ணாமலை தீபத்திருவிழா போக்குவரத்து முன்னேற்பாடுகள்: சாலைப் பாதுகாப்பு ஆணையா் ஆய்வு

மக்களை பற்றி கவலைப்படாத திமுக அரசு: நயினாா் நாகேந்திரன்

இரு மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கி தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது: கே.எம். காதா்மொகிதீன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்ஐஆா் படிவங்கள் வழங்க நவ. 22, 23 இல் சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT