லியம் லிவிங்ஸ்டன் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

இங்கிலாந்து ஒருநாள் அணியில் லியம் லிவிங்ஸ்டன் மீண்டும் இடம்பிடிப்பாரா?

இங்கிலாந்து அணியின் லியம் லிவிங்ஸ்டன் மீண்டும் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பாரா?

DIN

இங்கிலாந்து அணியின் லியம் லிவிங்ஸ்டன் மீண்டும் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி சௌதாம்ப்டனில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். 4-வது வீரராக களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவர், 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் லியம் லிவிங்ஸ்டன் இடம்பெற்றபோதிலும், அந்த அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் லியம் லிவிங்ஸ்டன் இடம்பெறவில்லை.

டி20 போட்டியில் முன்கூட்டியே களமிறக்கப்படும் வாய்ப்பை பயன்படுத்தி லியம் லிவிங்ஸ்டன், எதிர்காலத்தில் மீண்டும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக லிவிங்ஸ்டன் பேசியதாவது: இங்கிலாந்து அணிக்காக முன்வரிசையில் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு 31 வயதாகிறது. ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறாததற்காக அழப் போவதில்லை. உலகெங்கிலும் நிறைய கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து!

அடர் பனிமூட்டம் எதிரொலி: பொதுக்கூட்டத்துக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்த்த பிரதமர் மோடி!

அம்மா, தங்கையிடம் இப்படிச் சொல்வார்களா? ராதிகா ஆப்தேவின் கசப்பான அனுபவம்!

SCROLL FOR NEXT