படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
கிரிக்கெட்

முதல் டெஸ்ட்: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (செப்டம்பர் 18) காலேவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

305 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 50 ரன்களும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களும் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில்லியம் ஓ’ரூர்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அஜாஸ் படேல் மற்றும் கிளன் பிளிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

நியூசிலாந்து நிதான ஆட்டம்

இலங்கை அணி 305 ரன்களுக்கு ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவான் கான்வே மற்றும் டாம் லாதம் களமிறங்கினர். கான்வே 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், டாம் லாதமுடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர். டாம் லாதம் 70 ரன்கள் (6 பவுண்டரிகள்) எடுத்தும், கேன் வில்லியம்சன் 55 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

ரச்சின் ரவீந்திரா 48 பந்துகளில் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், டேரில் மிட்செல் மற்றும் டாம் பிளண்டெல் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் எடுத்துள்ளது. டேரில் மிட்செல் 41 ரன்களுடனும், டாம் பிளண்டல் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நியூசிலாந்து அணி இலங்கையைக் காட்டிலும் 50 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT