5 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து வீரர்.  
கிரிக்கெட்

மழையால் ஆட்டம் பாதிப்பு: நியூசிலாந்து 300 ரன்கள் பின்னிலை!

இலங்கை நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

DIN

இலங்கை நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

இலங்கை- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி காலே பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்திருந்தது.

கமிந்து மெண்டிஸ் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். குசால் மெண்டிஸ் 50, மேத்திவ்ஸ் 36, தினேஷ் சண்டிமால் 30 ரன்களும் எடுத்தார்கள்.

தற்போது, 2ஆம் நாளின் துவக்கத்தில் 305 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்தின் வில்லியம் ரௌர்கே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நியூசிலாந்து அணி 1 ஓவருக்கு 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

டாம் லாதம் 1 ரன், டெவான் கான்வே 4 ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு இந்த வெற்றி முக்கியம் என்பதால் ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT