டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை மகளிரணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 20) அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதலில் டி20 உலகக் கோப்பைப் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. அங்கு நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
ஜெய்ஸ்வால், கில்லுக்கு எதிராக திட்டங்களை வகுப்பதே எங்களது நோக்கம்: ஆஸி. வேகப் பந்துவீச்சாளர்
Advertisement
Advertisement
இலங்கை அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது.
இலங்கை அணியை சமாரி அத்தப்பட்டு கேப்டனாக வழிநடத்துகிறார். ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணியே, உலகக் கோப்பைத் தொடருக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் இனோகா ரணவீரா மட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணி விவரம்
சமாரி அத்தப்பட்டு (கேப்டன்), ஹர்ஷிதா சமரவிக்கிரம, விஷ்மி குணரத்னே, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, சச்சினி நிசன்சலா, உதேசிகா பிரபோதனி, இனோஷி ஃபெர்னாண்டோ, அச்சினி குலசூர்யா, இனோகா ரணவீரா, ஷாஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா மற்றும் சுகந்திகா குமாரி.
ரிசர்வ் வீராங்கனை - கௌசினி நுத்யங்கானா