ஷுப்மன் கில், ரிஷப் பந்த்  
கிரிக்கெட்

ஷுப்மன் கில், ரிஷப் பந்த் சதம்: 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற இந்திய அணி 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

DIN

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி வங்கதேசத்துடன் விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 376க்கு ஆட்டமிழக்க அடுத்து ஆடிய வங்கதேச அணி 149க்கு ஆல் அவுட்டனது.

இந்தியாவின் பிரதான பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ராவின் வேகத்தை எதிா்கொள்ள முடியாமல் வங்கதேச பேட்டா்கள் தடுமாற, அவா்களை முற்றிலுமாக சரிக்க ஆகாஷ் தீப், முகமது சிராஜும் துணை நின்றனா். ரவீந்திர ஜடேஜாவும் இரு விக்கெட்டுகள் சாய்த்தாா்.

2ஆவது இன்னிங்ஸில் இந்தியாவின் சார்பாக ஷுப்மன் கில் (119), ரிஷப் பந்த் (109) இருவரும் சதமடித்து அசத்தினார்கள். இந்தியா 287/4க்கு டிக்ளேர் அறிவித்தது.

ரிஷப் பந்த், ஷுப்மன் கில்.

வங்கதேசம் வெற்றி பெற 515 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வங்கதேசம் 11 ஓவர் முடிவில் 49 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பு ஏதுமின்றி அதிரடியாக விளையாடி வருகிறது.

இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் வங்கதேசம் 400க்கும் அதிகமான ரன்களை டெஸ்டில் சேஸ் செய்து வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT