மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான நடுவர்கள். (கோப்புப்படம்| ஐசிசி)
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: நடுவர்கள் குழு அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான நடுவர்கள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான பெண் நடுவர்கள் குழு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் துபை மற்றும் ஷார்ஜாவில் வருகிற அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தொடங்க இருக்கின்றன. இந்தப் போட்டிகள் அக்டோபர் 20 வரை நடைபெற இருக்கின்றது. மேலும், துபை மற்றும் ஷார்ஜா மைதானங்கள் மொத்தமாக 23 போட்டிகளை நடத்த இருக்கின்றன.

ராகுல் டிராவிட்டுக்கும், கௌதம் கம்பீருக்கும் என்ன வித்தியாசம்? ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!

9-வது டி20 உலகக் கோப்பைக்கான மகளிர் அதிகாரிகள் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 10 நடுவர்கள் உள்பட 13 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிகாரிகள் குழுவில் அனைவரும் பெண்களாக இடம்பெற்றிருப்பது கிரிக்கெட்டில் பெண்களுக்கான பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!

அறிவிப்பட்டுள்ள பெண் நடுவர்களும் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாகவுள்ளனர். கிளேர் போலோசாக் 5-வது கோப்பையில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர். கிம் காட்டன் மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் 4-வது உலகக் கோப்பையில் விளையாடியவர்கள்.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டிவி நடுவராக பணியாற்றிய சூ ரெட்ஃபெர்னும் 4-வது உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமிக்கவர். அவருடன் 2-வது உலகக் கோப்பையில் விளையாடிய ஷான்ட்ரே ஃபிரிட்ஸ் மற்றும் மைகேல் பெரேரா இருவரும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைய காரணம் என்ன? ரிஷப் பந்த் பதில்!

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரிகள்

ஐக்கிய அமீரக ஐசிசி எலைட் பேனல் கள நடுவர்கள்: ஷான்ட்ரே ஃபிரிட்ஸ், ஜி.எஸ்.லக்ஷ்மி, மைக்கேல் பெரேரா.

ஐக்கிய அமீரக ஐசிசி எலைட் பேனல் நடுவர்கள்: லாரன் ஏஜென்பேக், கிம் காட்டன், சாரா டம்பனேவானா, அன்னா ஹாரிஸ், நிமாலி பெரேரா, கிளாரி போலோசாக், விருந்தா ரதி, சூ ரெட்ஃபெர்ன், எலோயிஸ் ஷெரிடன், ஜாக்குலின் வில்லியம்ஸ்.

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT