ராகுல் டிராவிட், கௌதம் கம்பீர் (கோப்புப் படம்) 
கிரிக்கெட்

ராகுல் டிராவிட்டுக்கும், கௌதம் கம்பீருக்கும் என்ன வித்தியாசம்? ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் வித்தியாசம் என்ன என்பது குறித்து...

DIN

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் வித்தியாசம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார்.

கம்பீருக்கும், டிராவிட்டுக்கும் வித்தியாசம் என்ன?

இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராட்டை விட, தற்போது அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் மிகவும் ரிலாக்ஸாக இருப்பார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவருடைய யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: கௌதம் கம்பீர் மிகவும் ரிலாக்ஸாக இருப்பதாக நினைக்கிறேன். அவரை நான் ரிலாக்ஸ்டு ராஞ்சோ என அழைக்க விரும்புகிறேன். அவர் எந்த விதமான அழுத்தத்திலும் இல்லை. காலையில் அணியின் பயிற்சி இருக்கும். பயிற்சி குறித்து அவர் பெரிதாக அழுத்தம் எடுத்துக் கொள்ளாமல், ரிலாக்ஸாக இருப்பார். நீங்கள் பயிற்சிக்கு வருகிறீர்களா? வாருங்கள் எனக் கூறுவார்.

பயிற்சிக்கு நாங்கள் வந்தவுடன் ராகுல் டிராவிட்டிடம் கட்டளைகள் இருக்கும். தண்ணீர் பாட்டில் கூட அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் சரியாக, சரியான நேரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் மிகவும் சரியாக கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என நினைப்பார். கௌதம் கம்பீர் எல்லா விஷயங்களிலும் கடுமையாக இருக்கமாட்டார். அவரது கட்டளைகள் கூட ரிலாக்ஸானதாக இருக்கும். அவர் அனைவரது இதயங்களையும் வெல்பவர். இந்திய வீரர்கள் அவரை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

SCROLL FOR NEXT