கமிந்து மெண்டிஸ் படம் | ஐசிசி
கிரிக்கெட்

டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் சமன் செய்துள்ளார்.

DIN

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் சமன் செய்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக 182* ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை

டெஸ்ட் வரலாற்றில் அறிமுக வீரர் ஒருவர் அதிகமான போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதத்துக்கும் அதிகமான ரன்களை குவிப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, பாகிஸ்தான் அணியின் சௌத் ஷகீல் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் அரைசதத்துக்கும் அதிகமான ரன்களை குவித்திருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சௌத் ஷகீலின் சாதனையை கமிந்து மெண்டிஸ் முறியடித்துள்ளார். அவர் அறிமுகமானது முதல் இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் அரைசதத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 182* ஆக உள்ளது.

டான் பிராட்மேனின் சாதனை சமன்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 182* ரன்கள் எடுத்தன் மூலம், கமிந்து மெண்டிஸ் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்த வீரராக கமிந்து மெண்டிஸ் மாறி சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடக்க 13 இன்னிங்ஸ்கள் எடுத்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான டான் பிராட்மேனும் 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இதன் மூலம், டான் பிராட் மேனின் சாதனையை கமிந்து மெண்டிஸ் சமன் செய்துள்ளார்.

டெஸ்ட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ரன்களைக் கடந்த வீரர்கள்

ஹெர்பெர்ட் சட்கிளிஃப் - 12 இன்னிங்ஸ்

எவர்டான் வீக்ஸ் - 12 இன்னிங்ஸ்

டான் பிராட்மேன் - 13 இன்னிங்ஸ்

கமிந்து மெண்டிஸ் - 13 இன்னிங்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT