ஃபகர் ஸமான் படம் | ஃபகர் ஸமான் (எக்ஸ்)
கிரிக்கெட்

காயத்திலிருந்து குணமடைந்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள்!

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார்கள்.

DIN

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராகி வருகிறார்கள்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயூப் இருவரும் காயம் காரணமாக நீண்ட நாள்களாக பாகிஸ்தான் அணியில் இடம்பெறாமலிருந்தனர். இவர்கள் இருவரும் அணியில் இல்லாதது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அண்மையில், நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடர்களிலும் இவர்கள் இருவரும் விளையாடவில்லை.

மீண்டும் கிரிக்கெட்

காயத்திலிருந்து குணமடைந்துள்ள பாகிஸ்தான் அணியின் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் மீண்டும் கிரிக்கெட் விளையாட தயாராக இருப்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஃபகர் ஸமான் மற்றும் சைம் ஆயூப் இருவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதற்காக பெஷாவர் ஸல்மி அணியின் பயிற்சி முகாமில் சைம் ஆயூபும், லாகூர் அணியின் பயிற்சி முகாமில் ஃபகர் ஸமானும் இணைந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணி, அந்த அணிக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கிலும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT