கார்பின் போஷ்.. 
கிரிக்கெட்

பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகல்: தென்னாப்பிரிக்க வீரருக்கு ஓராண்டு தடை!

பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய தென்னாப்பிரிக்க வீரருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில்(பிஎஸ்எல்) இருந்து விலகி ஐபிஎல் தொடரில் விளையாடிவரும் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் கார்பின் போஷுக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட ஓராண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இதேவேளையில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டியும் இன்று தொடங்கவிருக்கிறது. ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் கார்பின் போஷை பெஷாவர் அணி ஏலத்தில் எடுத்தது.

இதையும் படிக்க: கேப்டனாக எம்.எஸ்.தோனி வேறு மாதிரி... இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் வீரர் லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனால், ஒப்பந்தத்தை மீறிய போஷுக்கு ஒரு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் அடுத்தாண்டு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியாது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு கார்பின் போஷும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன டேவிட் வார்னர், டேரில் மிட்செல், டிம் செஃபெய்ட், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேசன் ஹோல்டர், வாண்டர் துஸன் உள்ளிடோரும் பிஎஸ்எல் தொடரில் விளையாடவுள்ளனர்.

இதையும் படிக்க: மீண்டும் கேப்டனாகிறார் தோனி! ருதுராஜ் கெய்க்வாட் விலகல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஞ்சாமி தந்தானே... ரசிகர்களைக் கவரும் இட்லி கடை பாடல்!

கூலி படத்துக்கு யு/ஏ சான்று கிடையாது: உயா் நீதிமன்றம்

திருப்பூரில் ரூ. 3,000 கோடி வர்த்தக பாதிப்பு! மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்!

ஆர்வமூட்டும் மம்மூட்டியின் களம்காவல் டீசர்!

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT