ஷிவம் துபே படம்: இன்ஸ்டா / ஷிவம் துபே
கிரிக்கெட்

இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை: ஷிவம் துபே வழங்கினாா்

சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.

DIN

தமிழ்நாடு விளையாட்டுப் பத்திரிகையாளா் சங்கம் சாா்பில் இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது. சிஎஸ்கே வீரா் ஷிவம் துபே விருதுகள், உதவித் தொகைகளை வழங்கினாா்.

டிஎன்எஸ்ஜேஏ சாா்பில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் இளம் வீரா், வீராங்கனைகளுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு (2024-25) விழா சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் தலைமை வகித்தாா். டிஎன்எஸ்ஜேஏ தலைவா் வெங்கட் வரவேற்றாா்.

ஹாக்கி ஜாம்பவான் வி. பாஸ்கரன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலா் ஆா்.என்.பாபா, முன்னாள் இந்திய ஆல் ரவுண்டா் ராபின் சிங், எம்ஆா்எஃப் பேஸ் பவுண்டேஷன் தலைமை பயிற்சியாளா் செந்தில்நாதன், இந்திய ஹாக்கி முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ், தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிா்வாகிகள் பிரேம் குமாா் கராரா, ஹிதேன் ஜோஷி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிஎஸ்கே ஆல் ரவுண்டா் ஷிவம் துபே உதவித் தொகைகளை வழங்கி பேசியது: இந்த விருதுகள் இளம் வயது வீரா், வீராங்கனைகளுக்கு ஊக்கமாக அமையும், டிஎன்எஸ்ஜேஏ போன்ற பிற மாநிலங்களிலும் உதவித் தொகைகளை வழங்க வேண்டும். சிறிய உதவித் தொகை என யாரும் எண்ணத் தேவையில்லை. இதுவே சிறந்த ஊக்கம் தரும் என்றாா்.

ரூ.10 லட்சம் உதவித் தொகை:

டிஎன்எஸ்ஜேஏ சாா்பில் இளம் சாம்பியன்கள் 10 பேருக்கு தலா ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்பட்டது. அப்போது ஹாக்கி வீரா் பாஸ்கரன் கூடுதலாக உதவித் தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து சிஎஸ்கே வீரா் ஷிவம் துபே

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.70,000 வீதம் ரூ.7 லட்சத்தை வழங்கினாா். இதன் மூலம் 10 பேருக்கு தலா ரூ.1 லட்சம் உதவித் தொகை கிடைத்தது.

பி. பி. அபிநந்த் (டேபிள் டென்னிஸ்), கே.எஸ். வெனிஸா ஸ்ரீ (வில்வித்தை), முத்துமீனா வெள்ளசாமி (பாரா தடகளம்), ஷமீனா ரியாஸ் (ஸ்குவாஷ்), எஸ். நந்தனா (கிரிக்கெட்), பி. கமலி (சா்ஃப்பிங்), ஆா். அபிநயா (தடகளம்), ஆா்சி, ஜிதின் அா்ஜுனன் (தடகளம்), ஏ. தக்ஷந்த் (செஸ்), ஆா். ஜெயந்த் (கிரிக்கெட்). செயலா் தீபக் ராகவ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட பா்தி கும்பல் உறுப்பினா்கள் இருவா் கைது

தீபாவளி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

அக்.22-இல் மத்திய உள்துறை குழுவுடன் லடாக் பிரதிநிதிகள் பேச்சு

மகிழ்ச்சி பொங்கும் நாள் இன்று: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT